லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்..
What more can I ask for ? It was like to be near a sun . So warm . The tight hug , those eyes , the laugh , the style and the love . What a personality . SUPERSTAR @rajinikanth saw #LoveToday and wished me ❤️ Will never forget the words you said sir ❤️@archanakalpathi pic.twitter.com/Zm0ceJ1iZm
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 12, 2022
கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
குறிப்பாக இளைஞர்கள் அந்த திரைப்படத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் லவ் டுடே படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அதற்கான புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பகுதியில் பகிர்ந்த அவர், இதைவிட என்ன கேட்க முடியும்.
ஒரு சூரியனின் அருகில் இருந்தது போன்ற உணர்வு கொடுத்தது என தெரிவித்துள்ளார். அத்துடன் ரஜினிகாந்த் தன்னை கட்டி அணைத்து பாராட்டியதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
மேலும் ரஜினிகாந்த் என்ன ஒரு மனிதர். அவர் கூறிய வார்த்தைகளை மறக்கவே முடியாது எனவும் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என திரை உலகில் கூறுகின்றனர். 6 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது...
0 கருத்துகள்