Ticker

6/recent/ticker-posts

Read posts in your preferred Language

2021-ல் ட்விட்டரை தெறிக்க விட்ட விஜய்யின் பீஸ்ட் பட போஸ்ட்!!!‌‌

Help Us By Just Clicking Below

ளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.


இந்தாண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக நடிகர் விஜய்யின் பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் இடம் பெற்றுள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து இதனை சமூக வலைதளங்களில் உடனடியாக ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர் விஜய் ரசிகர்கள்.




தற்போது ட்விட்டர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி 2021-ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. இந்த ட்வீட் இப்போது வரை 3,42,570 லைக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது


மேலும் தகவல் அறிய விரும்பினால் மேலே உள்ள படத்தைக் கிளிக் செய்து மேலும் தகவலுக்கு எங்கள் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்!!


கருத்துரையிடுக

0 கருத்துகள்