Ticker

6/recent/ticker-posts

Read posts in your preferred Language

தளபதி66 ஹீரோயினாக முன்னணி நடிகை ஒப்பந்தம்! அப்போ கீர்த்தி சுரேஷ் இல்லையா?

Help Us By Just Clicking Below

தளபதி66 ஹீரோயினாக முன்னணி நடிகை ஒப்பந்தம்! அப்போ கீர்த்தி சுரேஷ் இல்லையா?



தற்போது பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கினில் பிசியாக இருந்து வருகிறார் விஜய். நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் அந்த படத்திற்காக விஜய் தற்போது டப்பிங் பேசி முடித்திருக்கிறார். அவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதால் தான் அவரது பணிகளை முடித்து கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

மேலும் படிக்க!

இந்தாண்டு வசூலில் சாதனை செய்த டாப் 5 படங்கள்.. இங்கேயும் கெத்து காட்டும் தளபதி

விஜய் சுற்றுலா முடித்து திரும்பியபிறகு தனது அடுத்த படமான தளபதி 66 தொடங்க இருக்கிறார். இதை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இதன் மூலமாக அவர் நேரடி தமிழ் - தெலுங்கு படத்தில் முதல்முறையாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என அதிகார்பூர்வமாக எந்த தகவலும் வராமல் இருந்தது..


கீர்த்தி சுரேஷ் தான் மீண்டும் விஜய் உடன் ஜோடி சேர்கிறார் என தகவல் பரவி இருந்தது. ஆனால் தற்போது தளபதி 66 ஹீரோயினாக ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க!

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து சுற்றுலா கிளம்பு விஜய்.. எங்கே என்று தெரியுமா?

ராஷ்மிகா விஜய் உடன் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது என கடந்த சில வருடங்களாகவே பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து வந்திருக்கிறார். அவரது ஆசை தற்போது நிறைவேறும் சூழ்நிலை அமைந்திருக்கிறது.


ராஷ்மிகா நடித்திருக்கும் புஷ்பா படம் தற்போது ஹிட் ஆகி இருக்கும் நிலையில் தான் தளபதி 66ல் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது உறுதியா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும். 


மேலும் தகவலுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து, எங்கள் வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் எங்கள் சுவாரஸ்யமான இடுகைகளைப் பார்க்கவும்..



கருத்துரையிடுக

0 கருத்துகள்